பெருமை பெற்றோரின் கருத்துக்கள்
வணக்கம் நான் S.கோமதி கே.எஸ்.ஆர். அக்ஷராவில் மூன்றாம் வகுப்பில் பயலும் சஹானாவின் அம்மா , முதலில் நான் என் நன்றியைத் தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன். ஏனென்றால் என்னுடைய பள்ளி வாழ்க்கையையும், என்னுடைய சிறுவயது நிகழ்வுகளையும் மீண்டும் எனக்கு ஞாபகப்படுத்தியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பள்ளியில் இருந்து வந்த இந்த மதர்ஸ்கார்னிவல் அறிக்கையை பார்த்த உடன் எதில் கலந்து கொள்ளலாம் என்ற தேடலில் எனக்கு முதன்முதலில் தோன்றியது cooking without fire தான்.
ஏனென்றால் இது கருத்தானதாகவும் இயற்கைக்கு உற்ற நண்பனாகவும் நமக்கு நம் எதிர்காலத்தின் உணவு பழகத்திற்கு மிகவும் அத்தியாவசியமான ஒரு முறையாகும். இந்த முறையில் சமைத்து நம் வருங்கால செல்வங்களுக்கு கொடுத்தால் அவர்கள் நல்ல ஆரோக்கியமானவர்களாக வருவார்கள் என்பதில் எந்த மாற்றமும் இல்லை என்று நினைத்தேன். அதனால் அதற்கு தேவாயனதை தயார் செய்தேன். மேலும் இதில் அதிக நபர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று நினைத்தேன். இருந்தாலும் செய்வதை திருந்த செய் என்பதை மனதில் கொண்டு செய்யும் உணவு fast food ஆகவும், junk food ஆகவும் இருக்கக் கூடாது என்று தேடித்தேடி நல்ல, சுவையான ஆரோகியமான, அதே நேரம் இயற்கை உணவாக செய்ய எண்ணி தயார் செய்து கொண்டு வந்தேன். இங்கு வந்த பின்பு தான் தெரிந்தது இந்த போட்டியில் தான் அதிகமாக கலந்து என்று ஆனாலும் போட்டி ஆரம்பித்த உடன் விதிகளைப் பின்பற்றி குறித்த நேரத்தில் செய்து முடித்த உடன் திருப்தியாக இருந்தது.
போட்டி நேரம் முடிந்த பின்பு அங்கு இருந்த மற்ற தோழிகளுடன் கலந்து உரையாடும் போது மிகவும் ஆனந்தமாக இருந்தது. வெளியிடங்களின் பேசும் போது ஆரம்பத்தில் எண்டக்கு தயக்கமாக இருக்கும். ஆனால் பள்ளியின் அனைத்து விழாக்களிலும் கலந்து கொள்வதால் இப்போதெல்லாம் எனக்கே என்மேல் தன்னபிக்கை வருகிறது. நடுவர்கள் ருசி பார்த்து சென்ற பின்பு நாங்கள் செய்ததை எங்களுக்குள் பரிமாறி கொண்டதில் மிகவும் மகிச்சியாக இருந்தது. இது பள்ளியின் நிகழ்ச்சிகள் என்னை இல்லத்தரசிகளுக்கு வெளி உலகை அறிந்து கொள்ள, மற்றவர்களுடன் கலந்து பழக, திறமையை வளர்த்து கொள்ள உதவும் ஒரு வரப்ரசாதம். ஆதனால் இது போன்ற நிகழ்சிகளை பள்ளி வருடாவருடம் நடத்த வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன். அதே நேரம் Mother’s Carnival – ஆக இல்லாமல் Parents Carnival – ஆக இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கும் என்பது என் கருத்து. இந்த பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் வருபவர்களை வரவேற்று நன்றாக உபசரித்து கவனித்து நெருங்கிய வீட்டு விழாவிற்கு சென்று வந்த உணர்வை ஏற்படுத்தியது. இந்த சிறப்பான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிர்வாகத்திற்கு என் மனமார்ந்த நன்றியை மீண்டும் ஒரு முறை தெரிவித்து கொள்கிறேன். இப்பள்ளி மேன்மேலும் வளர்ச்சி அடைந்து, சிறந்த பள்ளியாக பெயர் பெற வேண்டும் என்று கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்.
நன்றி.